எங்கே ஓடுகிறாய்?
July 20, 2013
அதிகாலை எட்டு மணிக்கெல்லாம்
அரக்கப் பறக்க ஆயத்தமாகி
அரைகுறை வயிற்றை நிரப்பிவிட்டு
முன்னங்கால்கள் முகமருகே வர
பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க
ஓடிக்கொண்டே இருக்கிறேன்!
“எங்கே தான் ஓடுகிறாய்?”
என்ற குரல்கள் ஆங்காங்கே..,
எங்கே..?! என் வகுப்பறைக்குத் தான்!
நமக்கு படிப்பு தான் முக்கியம்.